Saturday 10 September 2011

ஞாபகமறதி என்பது வரமா? சாபமா?

ஞாபகமறதியை அன்றாடம் சந்திக்காத நபர் இருக்கமுடியாது, இதற்கு மூலகாரணம் அறிய கடமைப்பட்டு இருக்கிறேன். பெரும்பாலும் அறிவியல்ரீதியாக பல  காரணங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அது தவிர மனரீதியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. நான் இங்கே மனரீதியாக உள்ள காரணிகளை பற்றி என் கருத்தை எடுத்து   வைக்கிறேன்

முதல் முக்கிய காரணம்: பதற்றம், பெரும்பாலும் இந்த  சூழலில் மறதி மிக அதிகமாக இருக்கும். காரணம், மனம் தெளிவாக சிந்திக்கும் திறனற்று இருக்கும்.

இரண்டாவது: பிடிக்காத விஷயம் செய்தல், பெரும்பாலும் இந்த  சூழலில் மறதி பொதுவாக இருக்கும். காரணம், முழு  ஈடுபாடின்மை .

மூன்றாவது: மறதியை பெரிது படுத்தாமல் இருத்தல், மறதி இருப்பது    அறிந்தும் அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பது. காரணம் அடைந்ததை விட இழந்ததை பற்றி அறியாமல் இருத்தல்.

நான்காவது: மறதிக்கு தீர்வு காண நினைத்து குறிப்பாக என்ன செய்வது என்று தெரியாமல் இருத்தல், காரணம் முயற்சி உண்டு தேர்ச்சி இல்லை.


இதற்கு மேலும் சில காரணிகள் இருக்கலாம்........... மறதியை கட்டுபடுத்த முதல் தேவை, நம்பிக்கை வேண்டும்-இது ஒரு தீர்க்க முடியாத நோய் இல்லை. மனித மூளையை பயன்படுத்தாத நிலை.

இதற்கு ஒரு உதாரணம்- யாரேனும் எனக்கு ஞாபகமறதி உண்டு என்று கூறினால், அது ஒரு தற்காப்பு முயற்சியே, அவர்கள் வேறு சில வேலைகளை செய்யும் போது அதை உணர முடியாது. காரணம் ஈடுபாடே.


சில சமயங்களில் ஞாபகமறதியும் நன்மையே!!!!!!!!

நன்றும் தீதும் கலந்ததே உலகம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு நடந்த நன்மையை விட நடந்த தீமையே நம் மனதில் மேலோங்கிநிற்கும், அது நம் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையல்லவா? இங்கே மறதி நமக்கு நன்மையே!

இறுதியாக, மறதியை ஒரு கத்தி போல பழங்கள் நறுக்கவும் பயன்படுத்தலாம், கையை நறுக்கவும் பயன்படுத்தலாம். முடிவு அவரவர் கையிலே!!!!!!!!!!!!!!!!






No comments:

Post a Comment